சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநர் பலி
நத்தம் அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-05-27 09:39 GMT
ஓட்டுநர் பலி
நத்தம் அருகே சாலையில் குறுக்கே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இன்று சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார்.
இது குறித்த தகவல் அறிந்த நத்தம் காவல் துறையினர் ஓட்டுநர் உடலை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்.