கழக கண்காணிப்பாளர் உத்தரவை மீறும் ஓட்டுனர்கள்
கரம்பை கிராமத்திற்கு கழக கண்காணிப்பாளர் உத்தரவை மீறி குறிப்பிட்ட பேருந்துகள் மட்டுமே நின்று செல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் ;
Update: 2024-05-06 11:39 GMT
கரம்பை கிராமத்திற்கு கழக கண்காணிப்பாளர் உத்தரவை மீறி குறிப்பிட்ட பேருந்துகள் மட்டுமே நின்று செல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கரம்பை கிராமத்திற்கு அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என பாபநாசம் போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் அனைத்து பேருந்து ஓட்டுனர்களுக்கும் கடந்த ஜூலை மாதம் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் தற்போது வரை குறிப்பிட்ட பேருந்துகள் மட்டுமே நின்று செல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்