திருச்செந்தூரில் அனுமதியின்றி டிரோன் பறக்க தடை
திருச்செந்தூா் பகுதியில் அனுமதியின்றி டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2024-01-28 04:36 GMT
கோட்டாட்சியா் மூ.குருச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோயில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் போலீசாரின் அனுமதி பெற்று டிரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுக்கலாம். இந்நிலையில், சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட்ட இடங்கள், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் உரிய அனுமதியில்லாமல் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக புகாா் வந்தது. எனவே, ஜன.26 (வெள்ளிக்கிழமை) முதல் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுவோா் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதித்து டிரோன் கேமராக்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.