ஆட்சியர் அலுவலக தரையில் படுத்து போதை ஆசாமி அட்ராசிட்டி!

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்து பிரச்சினை செய்த போதை ஆசாமியை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-31 07:28 GMT

 போதை ஆசாமி 

வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான அலுவலகங்கள் உள்ளது. பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென அலுவலக வளாகத்தில் தரையில் படுத்தார். இதைப் பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அந்த நபர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார் என்று கருதி ஓடிச் சென்று அவரை எழுப்ப முயன்றனர்.

Advertisement

அவர் எழாததால் அவர் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முயன்றனர்.பின்னர் அந்த நபர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் திடீரென தரையில் படுத்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News