அர்த்தநாரீஸ்வரர் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி;
By : King 24x7 Website
Update: 2024-02-16 04:49 GMT
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வுதுறை, சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) திரு.M.புகழேந்தி அவர்களும், நாமக்கல் கோட்ட (கலால்) அலுவலர், திரு.S.கண்ணன் அவர்களும், நாமக்கல் மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர் திரு.G.ராஜ்கமல் அவர்களும், திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு,உதவி ஆய்வாளர் திரு.S.சாந்தகுமார் அவர்களும், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.G.கற்பகம் அவர்களும், நாமக்கல் மாவட்ட மனநல பிரிவு உளவியலாளர், திருமதி S.அர்ச்சனா அவர்களும் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். இந்நிகழ்வில் முதல்வர் வெங்கடாசலம் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கொண்டனர்.