போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த "போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு கூட்டத்தில் மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-03-26 02:27 GMT

விழிப்புணர்வு கூட்டம் 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த போதைப்பொருள் தடுப்பு குழு நடவடிக்கையின் ஒரு பகுதியாக "போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு கூட்டம்நடந்தது.   இம்முகாமில் கல்லூரி முதல்வர் ப. அகிலன், வரவேற்றுப் பேசினார்.

சென்னை மீன்வள முதுகலை படிப்புகள் நிறுவனம், முதல்வர் (பொறுப்பு) சண்முகம், மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாலாஜி சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்களது உரையில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வலியுறுத்தினார்கள்.  சென்னை அமலாக்கத்துறை காவல்துறை தலைவர் மயில்வாகனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினார்.

முகாமில் இக்கல்லூரியைச் சார்ந்த 215 மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்பு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முடிவில் உதவிப்  பேராசிரியர் சிவசங்கர் நன்றியுரை வழங்கினார்.

Tags:    

Similar News