மும்மையிலிருந்து   சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தல்:  4 பேர் கைது

இந்தியாவில் தடை செய்யப்பட்ட  போதை மாத்திரைகளை மும்மையிலிருந்து  சென்னைக்கு ரயிலில் கடத்திய  4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-30 01:41 GMT

சென்னை மற்றும் திருவள்ளூர் சேர்ந்த  வாலிபர்கள் இந்தியாவில்  தடை செய்யப்பட்ட போதை மாத்திரிகள் மும்பையில் குறைந்த விலைக்கு வாங்கி மும்மையிலிருந்து சென்னை செல்லும் மும்பை அதிவிரைவு ரயிலில் சென்னைக்கு கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்று அதிகாலை  திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ்  தலைமையில், ஆய்வாளர்கள்  மதியரசன், விஜயலட்சுமி மற்றும் தனி படை போலீசார் இணைந்து திருத்தணி ரயில் நிலையம் வந்தடைந்த  மும்பை அதிவிரைவு ரயிலில் தனித் தனியாக  சோதனையிட்டதில் சீட்டுகளுக்கு அடியில் பேக்குகளில் போதை மாத்திரைகள் பதுக்கிவைத்து கடத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து திருத்தணி போலீசார்  இருவரை கைது செய்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். இதே போல் மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் இருவரை கைது செய்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.  திருத்தணி போலீசார்  கைது செய்த வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் எம்.ஜி.எம்.நகர் சேர்ந்த   தயாளன்(23),மோனிஷ் குமார்(28)  ஆகியோரை கைது செய்து விசாரணையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மும்பையில்  10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை ரூ. 38க்கு வாங்கி  தமிழகத்திற்கு கடத்தி வந்து ஒரு மாத்திரை விலை ரூ. 700க்கும் 10 மாத்திரைகள் கொண்ட அட்டை ரூ. 7 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததாக விசாரணையில் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அவர்களிடம் ரூ. 4.67 லட்சம் மதிப்புள்ள 670 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து தயாளன், மோனிஷ்குமார் ஆகிய 2 பேர் கைது செய்தனர்‌ திருத்தணி  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர்  விஜயலட்சுமி   தலைமையில் போலீசார்  வாலிபர்கள்  2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து  வழக்கு பதிவு செய்து விசாரணையில்  சென்னை கண்ணகி நகரை சேர்ந்த  யுவராஜ்(29), மோகன்(26) ஆகிய இரண்டு பேரிடம் ரூ.3.35 லட்சம் மதிப்புள்ள 525 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டனர்  மொத்தமாக  1195 மாத்திரைகள் பறிமுதல் செய்து 4 பேர் கைது செய்யப்பட்டு திருத்தணி நீதிமன்றத்தில் ஆதர படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News