பாலக்கோடு அருகே அதிகமாக மது குடித்த லாரி ஓட்டுநர் சாவு

பாலக்கோடு அருகே அதிகமாக மது குடித்த லாரி ஓட்டுநர் பரிதாப இறந்தார்.

Update: 2023-12-26 11:17 GMT

கோப்பு படம் 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பத்தலஅள்ளியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (33). லாரி டிரைவரான இவருக்கு சின்னபொண்ணு(31)என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சிவசங்கருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், மனைவியுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் சின்னபொண்ணு கோபித்துக்கொண்டு மகள்களுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதனால் மனவேதனை அடைந்த சிவசங்கர்,குடிக்கு அடிமையானார். கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப் அருகில் போதையில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News