டிடிவி தினகரன் பிறந்த நாள்: தங்க தேர் இழுத்து வழிபாடு

அமமுக சார்பில் டிடிவி தினகரன் பிறந்த நாள் முன்னிட்டு கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.

Update: 2023-12-13 10:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிசம்பர் - 13ம் தேதி பிறந்தநாள் முன்னிட்டு பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில், பெரம்பலூர் அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், தலைமை நிலைய செயலாளரும், மண்டல பொறுப்பாளர், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் முன்னிலையில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கோவில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் அமமுக மாவட்ட துணை செயலாளர் பீமா ரஞ்சித் குமார் ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் ஜெயக்குமார், ஆலத்தூர் வீரமுத்து, வேப்பந்தட்டை சேகர், வேப்பூர் நாகராஜ், செந்துறை காரல் மார்க்ஸ், , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருண்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இளவரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கலைவாணன், பொறியாளர் அணி செயலாளர் மதுபாலன், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் நீதி ராஜா, விவசாயப் பிரிவு செயலாளர் கதிரேசன், குன்னம் சட்டமன்ற பொதுக்குழு உறுப்பினர் அருண்குமார், இளைஞர் அணி செயலாளர் மணிவேலன், மற்றும் கழகத் தொண்டர்கள் பலர் பங்கேற்று வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

Tags:    

Similar News