டிடிவி தினகரனின் வேட்பு மனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு

பிரமாண பத்திரத்தை இணையத்தில் பதிவேற்ற காலதாமதம் ஆகியதால் அவரது வேட்பு மனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Update: 2024-03-28 07:41 GMT
தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது தேனி நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.   இதில் 33 வது என்னில் வந்த டிடிவி தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர் இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனார் தெரிவித்தார்.
Tags:    

Similar News