கனமழை பலத்த காற்று காரணமாக படகுகள் நிறுத்திவைப்பு

பலத்த காற்று வீச கூடும் என்பதால் தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் படகுகள் நிறுத்திவைத்து மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2024-05-21 06:45 GMT

பலத்த காற்று வீச கூடும் என்பதால் தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் படகுகள் நிறுத்திவைத்து மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.


குமரி மாவட்டத்தில் இன்று 21 ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.இதனால் கட்டுமர மீனவர்கள் மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பாகவைத்துள்ள நிலையில் இன்று காலை தேங்காய்பட்டணம் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்தது. கடற்கரை பகுதியில் காற்றும் வீசியது. இதனால் தேங்காய் பட்டணம் பகுதி வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. படகுகள்,வ, விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் வரத்து குறைந்தது.
Tags:    

Similar News