உரிய ஆவணமில்லாததால் ரூ. 2.36 லட்சம் பறிமுதல்

ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் காய்கறி வியாபாரியிடம் ரூ.2. 36 லட்சம் பணத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-04-04 04:06 GMT

ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் காய்கறி வியாபாரியிடம் ரூ.2. 36 லட்சம் பணத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

ஓசூர் அருகே காய்கறி வியாபாரி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக ரூ 2 லட்சத்து 36 ஆயிரம் பறிமுதல் செய்த அதிகாரிகள் .... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை பாகலூர் சாலையில் முகுலூர் என்ற பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நண்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பேரிகை பகுதியிலிருந்த வந்த காரை நிறுத்தி சோதனை மேற்க் கொண்ட போது காரில் இருந்த ரூ 2 லட்சத்து 36 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

  விசாரணையில் பெங்களூரை சேர்ந்தவர் சாதிக் வயது 44 , காய்கறி வியாபாரியான அவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்து தெரிய வந்தது இதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஓசூர் சார் ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான செல்வி பிரியங்காவிடம் ஒப்படைத்தனர்

Tags:    

Similar News