விராலிமலை கோயில் தேர் உறுதிதன்மை: தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு

விராலிமலை கோயில் தேர் உறுதிதன்மை குறித்து பெல் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2024-02-01 16:20 GMT

ஆய்வு செய்யும் தொழில்நுட்ப குழுவினர்

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேர் அச்சு மற்றும் சக்கரங்களை பெல் தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா, வைகாசி விசாகத் திருவிழா காலங்களில் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

பழைய தேர் பழமையானதால் கடந்த 1999 ஆம் ஆண்டு புதியதாக தேர்வு செய்யப்பட்டு தேரோட்டம் நடந்து வருகிறது. கடந்த 24ஆம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இந்த தேரின் இரும்பு அச்சு மற்றும் சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் செய்யப்பட்டது. தேர்ச்சக்கரங்கள் செய்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தேர் அச்சு மற்றும் சக்கரங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அனிதா அறிவுறுத்தினார்.

அதன் பெயரில் திருச்சி பெல் நிறுவனத் தொழில்நுட்ப நிபுணர் மதுரை வீரன் தலைமையிலான குழுவினர் விராலிமலை வந்து புதுக்கோட்டை திருக்கோயில் செயல் அலுவலர் முத்துராமன் திருப்பணிக்குழு பூபாலன், முன்னாள் அறங்காவலர் ராமச்சந்திரன், மேற்பார்வையாளர் மாரிமுத்து, கோயில் பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் தேர் அச்சு மற்றும் சக்கரங்களை ஆய்வு செய்தன.

அச்சு மற்றும் சக்கரங்களின் உறுதி தன்மை குறித்து விரைவில் அறிக்கை அளிப்பதாக தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News