தசரா விழா: வேடம் அணிந்த பக்தர்கள் பக்தர்கள் காணிக்கை வசூல்!

தூத்துக்குடியில் கலைகட்டிய தசரா திருவிழா; விதவிதமான வேடங்கள் அணிந்து பக்தர்கள் மாநகரம் முழுவதும் ஊர்வலமாக சென்று காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

Update: 2023-10-24 11:32 GMT

காணிக்கை வசூல்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடியில் கலைகட்டிய தசரா திருவிழா; விதவிதமான வேடங்கள் அணிந்து பக்தர்கள் மாநகரம் முழுவதும் ஊர்வலமாக சென்று காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு திருவிழாவிற்காக பக்தர்கள் மாலை அணிந்து 40-நாட்கள் மற்றும் 10-நாட்கள் என விரதம் இருந்து தாங்கள் காரியம் நிறைவேற அம்மனை வேண்டி தங்களுக்கு பிடித்த வேடம் அணிந்து காணிக்கை வசூலித்து தசரா திருவிழாவின் இறுதி நாளில் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று வேண்டுதல் நிறைவேற வேண்டி தாங்கள் வசூலித்த காணிக்கையை முத்தாரம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி பின்னர் மாலை விரதத்தை முடித்துகொள்வது வழக்கம்.

இதைபோல் மாலை அணிவிக்கும் பக்தர்கள் செட்டு அமைத்து விதவிதமான வேடங்கள் அணிந்து ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று ஆடி அருள்வாக்கு கூறி காணிக்கைகள் வசூலுத்து வருகின்றனர். இதில் முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் அம்மன், சிவன், பார்வதி, கிருஸ்ணர், அனுமன், பிள்ளையார் என ஏராளமான சுவாமி வேடங்கள் மற்றும் குரங்கு, புலி, குறவன், குறத்தி, போலீஸ், திருடன், உள்ளிட்ட வேடங்களும் அணிந்து வந்த பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.‌

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் இறுதிநாளன இன்று தூத்துக்குடி சிவன் கோவில் தெரு, காசு கடை பஜார், பழைய மாநகராட்சி, பால விநாயகர் கோவில், தெரு, செல்விஜே தெரு, பங்களா தெரு, உள்ளிட்ட மாநகர் முழுவதும் வேடம் அணிந்த பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க ஆடல் பாடல் பாடி காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் இன்று இரவு குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

Tags:    

Similar News