விவசாயிகள் விற்பனை செய்ய இ-சேவை வலைதளம்
விவசாயிகள் விற்பனை செய்ய இ-சேவை வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-08 10:46 GMT
பயிற்சி பட்டறை
திண்டுக்கல் வனக் கோட்டத்தின் கால நிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிா்ப்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்குதல் திட்டம், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் மரம், மரமல்லா வனப் பொருள்களுக்கான இ-சேவை வலைதளம் உருவாக்குதல் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் வனவியில் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலா் பு.மு.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கரூா் மாவட்ட வன அலுவலா் வி.ஏ.சரவணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி முதல்வா் வரதராஜ் கலந்து கொண்டாா்.