ஈஸ்ட்டர் சண்டே சிறப்பு வழிபாடுகள் !
குமாரபாளையத்தில் ஈஸ்ட்டர் சண்டே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-04-01 04:36 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஈஸ்டர் சண்டே சிறப்பு வழிபாடு நடந்தது. ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனிதவெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களால் மனப்பூர்வமாக இயேசு மகானை எண்ணி, வழிபடும் நாளாகும். இந்த நாளில் தேவாலயம் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம். புனித வெள்ளியடுத்து நேற்று ஏசுபிரான் உயிர்த்தெழும் நாளான ஈஸ்டர் சண்டே, கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ மக்கள் பெரும்பாலோர் ஊர்வலமாக வந்ததுடன், ஏசுபிரான் புகழ் பாடும் பாடல்கள் பாடியபடி வந்தனர். முக்கிய வீதிகளின் வழியாக வந்த இந்த ஊர்வலம் மீண்டும் தேவாலயத்தில் நிறைவு பெற்றது. அங்கு பங்கு தந்தை பாவேந்திரன் மற்றும் பங்கு பேரவை குழுவினர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.