மேட்டூரில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

மேட்டூர் அருகே நங்கவள்ளி பெரிய சோரகை உள்ள சென்ராய பெருமாள் கோவிலில் எடப்பாடி கே.பழனிசாமி சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்

Update: 2024-03-24 07:51 GMT

சென்ராய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

ஒவ்வொரு தேர்தலில் பிரச்சாரம் செய்யும் போதும் ,முக்கிய பொறுப்பு ஏற்கும் போதும் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு பூஜை செய்து பிரச்சாரத்தை தொடங்குவது வழக்கம். தற்போது தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது .இதனை முன்னிட்டு எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து சேலம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் விக்னேஸை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார். இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் உற்சாகமடைந்துனர். இந்த நிகழ்ச்சிகள் அதிமுக எம்.எல்.ஏ,க்கள், மாவட்டம், நகரம் ,ஒன்றியம் ,பேரூர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News