சிவகாசியில் இன்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

சிவகாசியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.;

Update: 2024-03-28 03:50 GMT

ராஜேந்திர பாலாஜியுடன் விஜய பிரபாகரன்

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில்,அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி போட்டியிடுகிறது.தேமுதிக கட்சியின் நிறுவனரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு,அதிமுக கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

இன்று  மாலை,தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகருக்கு ஆதரவாக கேட்டு,பாவடி தோப்பு திடலில் (காமராஜர் பூங்கா) அருகில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில்,அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News