எடப்பாடி பழனிச்சாமி நாளை நெல்லை வருகை
அதிமுக முன்னாள் எம்பி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை நெல்லைக்கு வருகிறார்.;
Update: 2024-05-28 06:02 GMT
எடப்பாடி பழனிச்சாமி
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை (மே 29) நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவர் பாளையங்கோட்டை மாதா மாளிகையில் நடைபெறும் அதிமுக முன்னாள் எம்பி முருகேசன் இல்ல விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு நெல்லை அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.