கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
கல்வி உபகரணங்கள்
தென்காசி மாவட்டம் தென்காசி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் வளா்பிறை சங்கம் சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற விழாவுக்கு, வளா்பிறை சங்கத் தலைவா் கோதா் மைதீன் தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ், நகரத் தலைவா் அபூபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.எம்.ஏ. முகம்மது அபூபக்கா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவசாய அணி மாநிலச் செயலா் தென்காசி முகமது அலி, இளைஞரணி தென் மண்டல அமைப்பாளா் நயினாா் முஹம்மது கடாபி, கடையநல்லூா் ஜபருல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.