ஆட்சியர் தலைமையில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் விழா
ரோட்டரி ஹாலில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் விழா நடந்தது. அரசு வழங்கும் கல்வி கடன்களை பெற்று மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி கேட்டுக் கொண்டார்.
Update: 2024-02-15 08:55 GMT
ரோட்டரி ஹாலில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் விழா நடந்தது. அரசு வழங்கும் கல்வி கடன்களை பெற்று மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விழாவில் 48 உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாந்தி வழங்கி பேசினார்.மாணவர்கள் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகளை பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும். மேலும் தங்களுக்கு விருப்பம் உள்ள துறைகளை தேர்ந்தெடுத்து அதில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். சிறந்த உயர் கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை மாவட்ட தொழில் மையம் தொழில் கூட்டுறவு அலுவலர் சுவித்ரா தலைமையுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி சிறப்புரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி கனரா வங்கி முதன்மை மேலாளர் மூர்த்தி மாவட்ட தொழில் மைய நிதி ஆலோசகர் கிருஷ்ணன் இந்தியன் வங்கி மண்டல முதன்மை மேலாளர் அகிலன் நன்றியுரை பாரத் ஸ்டேட் வங்கி துணை கிளை மேலாளர் ராஜ்குமார். இதில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.