பெரம்பலூரில் 29 மாணவர்களுக்கு ரூ.98.88 லட்சம் கல்விக்கடன்

பெரம்பலூரில் நடந்த கல்விக்கடன் முகாமில் 29 மாணவர்களுக்கு ரூ.98.88 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார்.;

Update: 2024-02-16 06:56 GMT

பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்விகடன் முகாம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ., தலைமையில் பிப்ரவரி - 15ம் தேதி நடைபெற்றது. இந்த முகாமில், பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு கல்விக் கடன் வேண்டி மனுக்கள் வழங்கினர்.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் பல கட்டங்களாக கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 888 மாணவ மாணவிகளுக்கு ரூ.32 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் பொருளாதார நிலையால் அவர்களின் உயர்கல்விக் கனவு கரைந்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியதன் அடிப்படையில், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடத்தப்படுகின்றது.

Advertisement

எனவே இந்த வாய்ப்பினை அனைத்து மாணவ மாணவிகளுகம் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட 29 மாணவர்களுக்கு ரூ.98.88 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடனுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத் குமார், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், அனைத்து வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News