"மருத்துவர்களுக்கான கல்வி நிகழ்ச்சி"

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம், மாமல்லன் மருத்துவமனை மற்றும் சென்னை சிபாகா தீவிர சிகிச்சை பிரிவு குழுமம் சார்பில், தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி

Update: 2024-04-24 05:15 GMT

 மருத்துவ கல்வி நிகழ்ச்சி

காஞ்சிபுரம் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம், மாமல்லன் மருத்துவமனை மற்றும் சென்னை சிபாகா தீவிர சிகிச்சை பிரிவு குழுமம் சார்பில், தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியும், மருத்துவர்களுக்குப் பாராட்டு விழாவும், உலா தந்த உவகை வாழ்த்து கவிதை வாசிப்பு நிகழ்ச்சியும் காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில வடக்கு மண்டல துணை தலைவர் டாக்டர் எஸ்.காசி, மாநில இணை செயலர் டாக்டர் பூபதி ஜான் ஆகியோர், 27 மருத்துவர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். மூத்த குழந்தை நல மருத்துவருமான டாக்டர்வே.சந்திரசேகரன், தான் எழுதிய 'உலா தந்த உவகை' என்ற தமிழ் கவிதையை வாசித்தார். சென்னை சிபாகா தீவிர சிகிச்சை பிரிவு குழும மேலாண்மை இயக்குனர் டாக்டர் ராஜா அமர்நாத் கிராமிய மற்றும் சிறுநகர் பகுதிகளில் மருத்துவ கவனிப்பு, சுற்றுச்சூழல் திட்டங்களை மாற்றி அமைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார். மீனாட்சி மருத்துவக் கல்லுாரி பொது மருத்துவக் சிறப்பு வல்லுனர் டாக்டர் எம்.எம். சத்தியநாராயணன், மதுவால் ஏற்படும் கல்லீரல் நோய்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இணை செயலர் டாக்டர் வெ.முத்துக்குமரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மதிப்புறு செயலர் டாக்டர் கா.சு.தன்யகுமார் நன்றி கூறினார். விழாவில் தேசிய மருத்துவமனைகள் குழும உதவி செயலர் டாக்டர் ஜி.மருண்ராஜ், மாமல்லன் மருத்துமனை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மைக்ரோ லேப் மருந்து நிறுவனம் செய்திருந்தது.
Tags:    

Similar News