கல்வியை வியாபாரமாக பார்க்ககூடாது - அமைச்சர் ரகுபதி
கல்வியை வியாபாரமாக இல்லாமல் தொண்டாக செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. கல்வியை வியாபாரமாக இல்லாமல் போதித்தால் மட்டுமே சமுதாயம் மாற்றமடையும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
Update: 2023-12-29 04:22 GMT
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்வி நிறுவனர் அண்ணாமலை செட்டியார், அவரது துணைவியார் சிவகாமி ஆச்சி ஆகியோரின் நூற்றாண்டு விழா இரண்டாவது நாளாக நடைபெற்றது. கல்லூரி ஆட்சி குழு தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சி குழு துணைத்தலைவர் சின்ன சேவுகன் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் சாந்தி வரவேற்றார். இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு நூற்றாண்டு விழா வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகையில் கல்வியை வியாபாரமாக இல்லாமல் தொண்டாக செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. கல்வியை வியாபாரமாக இல்லாமல் போதித்தால் மட்டுமே சமுதாயம் மாற்றமடையும் என பேசினார்