அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார்;
Update: 2023-12-07 06:20 GMT
அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு ஆரியநல்லுாா் தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக இளைஞா் நலம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டுயொட்டி, இந்நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தலைமைக் கழக பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் நகா்மன்றத் தலைவருமான எஸ்.எம். ரஹீம் தலைமை வகித்து, நோட்டுப் புத்தகங்களை வழங்கினாா். நகரப் பொருளாளா் தில்லை நடராஜன் முன்னிலை வகித்தாா். தொழிலதிபா் அசன்சேட்மைதீன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியா் கிளமென்ட்ரெஜீஸ் வரவேற்றாா்.