ரிஷிவந்தியம் அருகே முதியவர் சடலம் மீட்பு

வாணாபுரம், அத்தியூர் சந்தைமேட்டில் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-19 07:51 GMT

உயிரிழப்பு 

வாணாபுரம் அடுத்த அத்தியூர் சந்தைமேடு அருகே அடையாள தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த முதியவரின் உடலை மீட்டு விசாரித்தனர். அதில், இறந்த முதியவர், ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் மகன் கணேசன், 60; என்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News