தனியார் பேருந்து மோதி முதியவர் பலி
மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் தனியார் பேருந்து மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்த செங்குட்டை. பகுதியை சேர்ந்தவர் தறி தொழிலாளி முதியவர் பொன்னுசாமி (58) தனது மகள் சோபனாவை தருமபுரிக்கு அனுபவதற்கு ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது ராசிபுரத்தில் இருந்து மேட்டூர் சென்ற தனியார் பேருந்து ஒட்டுனரின் கட்டுபாட்டை இழந்து ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொண்ணுசாமி அவரது மகள் சோபனா மற்றும் சௌந்தர்ராஜன் (60) மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முதியவர் பொண்ணுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சௌந்தர்ராஜன் மற்றும் சோபனாவை ஜலகண்டாபுரம் போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகிர்னர்.