17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு !

பாபநாசத்தில் 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டி வந்த மாருதி கார் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.;

Update: 2024-06-14 07:03 GMT

மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் மேலவழுத்தூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் சுலைஹா பீவி வயது 74 என்ற மூதாட்டி மருந்து வாங்கி விட்டு ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது சாலியமங்கலம் பாபநாசம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக மாருதி காரை நண்பர்களுடன் ஓட்டி வந்த சிறுவன் மூதாட்டி மீது மோதிவிட்டு அருகில் இருந்த இரண்டு இருசக்கர வாகனம், கார் மீது மோதி பேரூராட்சி சுவற்றில் அருகில் இருந்த தூண் மீது மோதி நின்றது.

Advertisement

இதில் சுலைஹா பீவி பலத்த படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இதுகுறித்து சுலைஹாபீவியின் உறவினர் மேலவழுத்தூர் முகமது உசேன் வயது 48 கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்கு பதிவு செய்து மாருதி காரை ஓட்டி வந்த மட்டையான்திடல் மெயின் ரோட்டை சேர்ந்த விஷால் வயது 17 என்ற சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News