தேர்தல் விழிப்புணர்வு: மாபெரும் கபாடி போட்டி

மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது.

Update: 2024-04-07 07:45 GMT
மாவட்ட ஆட்சியர் 

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது.மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரத்தில் 09.04.2024, 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தினங்களில் வட்டார அளவிலான கபாடி போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி, 09.04.2024 அன்று நரிக்குடி வட்டத்தில் இலுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,

சாத்தூர் வட்டத்தில் எட்வர்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,

வத்திராயிருப்பு வட்டத்தில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியிலும்,10.04.2024 அன்று திருச்சுழி வட்டத்தில் எஸ்.பி.கே கல்லூரணி மேல்நிலைப் பள்ளியிலும், விருதுநகர் வட்டத்தில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திலும், சிவகாசி வட்டத்தில் கே.எம்.கே.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில்,

திருவில்லிபுத்தூர் மங்காபுரம் மேல்நிலைப் பள்ளியிலும், 11.04.2024 அன்று அருப்புக்கோட்டை வட்டத்தில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காரியாபட்டி வட்டத்தில் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,

இராஜபாளையம் வட்டத்தில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், நரிக்குடி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 97912-29305 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08322 என்ற தொலைபேசி எண்ணிலும்,

சாத்தூர் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94864-97010 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89912 என்ற தொலைபேசி எண்ணிலும், வெம்பக்கோட்டை வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94864-27621 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08294 என்ற தொலைபேசி எண்ணிலும், வத்திராயிருப்பு வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 89254-91170 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 89258-09644 என்ற தொலைபேசி எண்ணிலும், திருச்சுழி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94453-83316 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08317 என்ற தொலைபேசி எண்ணிலும்,

விருதுநகர் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 97916-34373 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08304 என்ற தொலைபேசி எண்ணிலும், சிவகாசி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 99444-24654, 98650-71770 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89921 என்ற தொலைபேசி எண்ணிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 84282-72694 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89916 என்ற தொலைபேசி எண்ணிலும், அருப்புக்கோட்டை வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 99941-03896 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89919 என்ற தொலைபேசி எண்ணிலும், காரியாபட்டி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94424-18663 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 89258-09649 என்ற தொலைபேசி எண்ணிலும், இராஜபாளையம் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 97893-83956 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08278 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

வட்டார அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.7,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.5000-மும், மூன்றாவது பரிசாக ரூ.3000-மும் வழங்கப்படும். பின்னர் மாவட்ட அளவில் 13.4.2024 அன்று நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50,000-மும், மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்கு தலா ரூ.25,000-மும் வழங்கப்படும் எனவும் இந்த போட்டிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News