கல்லுாரி மாணவிகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வரைப்படம்
கள்ளக்குறிச்சியில் 1,000 கல்லுாரி மாணவியர்களைக் கொண்டு இந்திய வரைபடம் வடிவமைத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் 1,000 கல்லுாரி மாணவியர்களைக் கொண்டு இந்திய வரைபடம் வடிவமைத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில், பாரதி கல்லுாரி மாணவியர்கள் மூலம் இந்திய வரைபடம் வடிவமைத்து, 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்வரும் லோக்சபா தொகுதி தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளித்திட வலியுறுத்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் துறை சார்பாக இந்திலி ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லுாரி மாணவியர்கள் கொண்டு இந்திய வரைபடம் மற்றும் 100 சதவீதம் ஓட்டளிப்போம் என வரைபடம் வாயிலாக 1000 மாணவிகள் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் செல்வி, பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.