திருப்பூரில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி!

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-26 06:42 GMT

விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் திருப்பூர் மாவட்டம் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114 - திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட எல் ஆர் ஜி மகளிர் அரசினர் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் என் வாக்கு! என் உரிமை! என் வாக்கு விற்பனைக்கு இல்லை!!என விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100% வாக்கு பதிவிற்கான ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். என் வாக்கு! என் உரிமை !என்வாக்கு விற்பனைக்கு இல்லை!!என கல்லூரி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். உடன் உதவி ஆட்சியர் பயிற்சி கிருத்திகா விஜயன், உதவி ஆணையாளர் வினோத், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News