அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-28 14:33 GMT
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம்,
தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (28.03.2024) பார்வையிட்டார்.
உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.