தேர்தல் பிரச்சாரத்தில் மோதல் - பாஜக பிரமுகர் உள்பட 2 பேர் காயம்

லாடபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் பாஜக பிரமுகர் மற்றும் அவரது சகோதரர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-04-15 04:51 GMT

பெரம்பலூர் மாவட்ட பிஜேபியில் பெரம்பலூர் தெற்கு ஒன்றிய தலைவராக இருந்து வருபவர் லாடபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி வயது - 50 இவர் ஏப்ரல் 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு லாடபுரம் கிராமத்தில், பிஜேபிக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது, இந்த தேர்தல் பணி செய்த பொழுது 6-வது வார்டு பகுதி சேர்ந்த ராஜா என்பவர், 10 வருடங்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது,

இதில் ராஜா  மற்றும் அவரது நண்பர்கள் என ஒன்பது பேர் தாக்குதலில் ஈடுபட்டதால், கந்தசாமிக்கு வலது கையில் காயமும், அவரது தம்பி லெட்சுமணனுக்கு தலை மற்றும் நடுமுதுகில் ரத்த காயமும் ஏற்பட்டு கந்தசாமி மற்றும் லெட்சுமணன் ஆகிய இரண்டு பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களை மருத்துவமனையில் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுபதி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்தமிழ், ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளரும், அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.டி. ராமச்சந்திரன் மற்றும் பிஜேபி சேர்ந்த நிர்வாகிகள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கந்தசாமி மற்றும் லட்சுமணனுக்கு ஆறுதல் தெரிவித்தனர்,

மேலும் பாதிக்கப் பட்ட கந்தசாமி லட்சுமணனுக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் பிஜேபி மாவட்ட தலைவர் செல்வராஜ் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் பிஜேபி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News