தேர்தல் பிரச்சார பொருட்கள் விலை நிர்ணய ஆய்வு கூட்டம்

தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2024-03-08 07:44 GMT

ஆய்வு கூட்டம் 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் 2024-ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவினக்கணக்கினை தாக்கல் செய்யும் வகையில் தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் பொருட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் இருந்தனர்.
Tags:    

Similar News