நாகர்கோவிலில் தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
அடிப்படை வசதிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் இன்று நடை பெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-09 06:38 GMT
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடை பெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:- மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை 15 தினங்களுக்குள் நிறைவு செய்வதற்கு சம்மபந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 01.01.2024ல் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்கள் பெயரினை இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காத நபர்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளுக்கு 10 நாட்கள் முன்பு வரை தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மற்றும் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவம்-6 மூலமாகவும் சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் துணை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கர நாராயணன், வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.