திருச்செங்கோட்டில் பறக்கும்டையினர் வாகன சோதனை
திருச்செங்கோட்டில் பறக்கும்டையினர் வாகன சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான பொழுதிலிருந்து அரசியல் கட்சிகள் தனிநபர்கள் பணம் கொண்டு செல்வதில் கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது,அதன்படி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கணக்கில் இல்லாமல் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பறிமுதல் செய்து வருகிறது இதற்காக பகுதிவாரியாக பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு சோதனைகள் செய்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் சந்தை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது சிறுமொளசியை சேர்ந்த ரமேஷ் என்பவர் 80 ஆயிரம் ரூபாய் மாடு விற்ற பணம் கொண்டு வந்த போது அந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
இந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உத்தரவிட்டார் இதேபோன்று திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாந்தூர் பகுதியில் ரூ. 81 ஆயிரத்து 500 ரூபாய் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் திருச்செங்கோடு பகுதியில் இன்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 500 ரூபாய் பறக்கும் படையினரால் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது