தீவிர ரோந்து பணியில் தேர்தல் பறக்கும் படைகள் !

ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் நத்தம் உள்ளிட்ட 6 சட்டபேரவை தொகுதிகளை ஒருங்கிணைத்த மக்களவை தொகுதிக்கு, 24 பறக்கும் படை வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2024-03-18 06:35 GMT

 பறக்கும் படை

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் நத்தம் உள்ளிட்ட 6 சட்டபேரவை தொகுதிகளை ஒருங்கிணைத்த மக்களவை தொகுதிக்கு, 24 பறக்கும் படை வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படை வாகனங்கள் வீதம் சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒரு சோதனை ஆய்வு குழுவினருக்கு 8 மணி நேர பணி என்கிற அடிப்படையில், காலை 8 மணி முதல் மதியம், 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சுழற்சி அடிப்படையில் அதிகாரிகள் பணி மேற்கொள்ள உள்ளனர்.
Tags:    

Similar News