உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
சிவகங்கை அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்;
Update: 2024-04-02 17:14 GMT
பணம் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே ஒக்கூரில் நிலையான கண்காணிப்பு குழு மண்டல துணைவட்டாட்சியர் சங்கர், சார்பு ஆய்வாளர் பாண்டி உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மேலூரை சேர்ந்த கோபி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 1,21,000-ஐ அவர்கள் பறிமுதல் செய்தனர். கடன் வாங்கியதாகவும், வெளிநாட்டுக்குச் செல்ல ஏஜென்ட்டுக்கு கொடுக்க பணத்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.