இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் நிதி அளிப்பு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் நிதி அளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 10:58 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் வைத்து தென்காசி மாவட்ட குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதி அளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.
இதில் இரண்டாம் கட்ட நிதியாக 2 லட்சம் நிதியை நிர்வாகிகளிடம் வழங்கினர். இந்த கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.