குமரி  தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு தேர்தல் பொதுப்பார்வையாளர்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் கட்டுபாட்டு அறையை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-29 07:02 GMT
குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த கலெக்டர், பொதுப் பார்வையாளர்

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப்பார்வையாளர் ஷேஷகிரி பாபு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்  ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து கூறுகையில்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தேர்தல் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மையம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் C-VIGIL   மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. என தெரிவித்தனர். 

நடைபெற்ற ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்,  உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன்,  கண்காணிப்பு அலுவலர்கள் வாணி, ஷீலா ஜாண், ஜான் ஜெகத் பிரைட் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News