பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ஆரணி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் ஆய்வு செய்தார்.;
Update: 2024-04-04 10:02 GMT
பதற்றமான வாக்குசாவடிகள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம் உள்ளதா? என கேட்டறிந்தார்.உடன் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எஸ். பாலசுப்பிரமணியன், தாசில்தார் ரா.மஞ்சுளா உள்ளிட்ட பலர் இருந்தனர்.