தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பொதுத் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு.
Update: 2024-03-28 01:51 GMT
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா, காவல்துறை பொது பார்வையாளர் விவேக் ஷியாம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ் குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்,மேட்டூர் சார் ஆட்சியர் என்.பொன்மணி, உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.