திமுகவின் கோட்டை கோவை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டி உள்ளது:அமைச்சர்
திமுகவின் கோட்டை கோவை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டி உள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் திமுக சார்பில் இன்று மாலை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் முப்பெரும் விழா மைதானத்தில் அமைச்சர் முத்துசாமி ஏற்பாடு பணிகளை பார்வையிட்டார்.பின்னர் தனியார் சேனல் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர்,
இது மேற்கு மண்டலத்துக்காக நடத்தப்படும் பொதுக்கூட்டம் மட்டும் இல்லை எனவும் ஒட்டுமொத்தமாக 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நடத்தப்படும் கூட்டம் என தெரிவித்தார்.கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு விழா,இவ்வளவு பெரிய வெற்றி மற்றும் கூட்டணி வருவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா என்று மூன்றையும் சேர்த்து முப்பெரு விழாவாக நடத்துவதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் என்ன திட்டங்கள் தேவை அங்குள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த கூட்டத்தில் திட்டமிட உள்ளதாகவும் பொதுக்கூட்டத்திற்கு இரண்டு முதல் மூன்று லட்சம் பேர் வருகை புரிவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ஈரோடு,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் தொண்டர்களின் எண்ணிக்கையை குறைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருவதாக கூறியவர் மூன்று லட்சம் பேருக்கு மேல் வருகை புரிவார்கள் எனவும் தெரிவித்தார். பொதுக்கூட்ட மேடை 150 அடி நீளம் 40 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும்,
மேடையில் 40 புதிய எம்பிக்களும் அமரும் வகையிலும் கூட்டணி கட்சி தலைவர்கள் அமரும் வகையிலும் மேடையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயமாக செய்வோம் என்பதை உத்திரவாதம் தரும் விதமாக இந்த பொதுகூட்டம் நடத்தப்படுகின்றது.
எனவும் தெரிவித்தார்.கோவையில் சர்வதேச அளவில் அமைக்கபட உள்ள கிரிகெட் மைதான இடத்தை ஆய்வு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின் மைதானம் அமைப்பது தொடர்பாக நிறைய திருத்தங்கள் சொல்லி இருக்கிறார் எனவும் அவற்றை சரி செய்து எந்த இடம் என முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
அதிமுகவினர் நினைப்பது போல மேற்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பது கற்பனை இல்லை எனவும் மேற்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதை மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் காட்டி இருக்கின்றனர் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.