தேர்தல் அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
உளுந்துார்பேட்டை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-20 04:48 GMT
ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. விழுப்புரம் லோக்சபா தேர்தலையொட்டி உளுந்துார்பேட்டை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உளுந்துார்பேட்டை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கி, தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார் தாசில்தார் விஜயபிரபாகரன், சமூக நல திட்ட தனி தாசில்தார் கண்ணன். வட்ட வழங்கல் தனி தாசில்தார் பாண்டி, மண்டல துணை தாசில்தார்கள் மணி, ஷீலாராணி, தேர்தல் துணை தாசில்தார் பரந்தாமன், தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.