வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி - ஆய்வுக்கூட்டம்

Update: 2023-11-06 05:49 GMT

ஆய்வு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம், நிலச்சீர்திருத்தத் துறை ஆணையரும், மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான டாக்டர் வெங்கடாசலம் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பேசியபோது, இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2024-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 09.12.2023 வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. இதற்கென்று சிறப்பு முகாம்கள் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படவுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெறப்படும் விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து பெற வேண்டும் எனவும், பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார், வாக்காளர் சிறப்பு சுருக்க முகாம்கள் நடைபெறுவது குறித்து அதிக அளவில் விளம்பர பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரிய பெருமக்களை தொடர்பு கொண்டு பயிலும் மாணவர்களை இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தகவலையும், அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைத்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்ற தகவலையும் தெரிவிக்க வேண்டும். என பேசினார். முன்னதாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களமேடு வாலிகண்டபுரம் , தண்ணீர் பந்தல் துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிலச்சீர்திருத்தத் துறை ஆணையரும், மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான டாக்டர் வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News