வளைவு சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
மாரம்பாளையம் வளைவு சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
Update: 2024-02-14 11:48 GMT
மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
மல்லசமுத்திரம் ஒன்றியம், மாரம்பாளையம் கிராமத்தில் வையப்பமலை– மோர்பாளையம் சாலையில் திருமணிமுத்தாறு மேம்பாலம் அருகில் மிகப்பெரிய வளைவுசாலை ஒன்று உள்ளது. இச்சாலையில் தினமும் இரவு, பகல் பாராமல் எண்ணற்ற கல்குவாரி டிப்பர்கள், அரசு பேருந்து, கனரக, இலகுரக வாகனங்கள் என எந்நேரமும் சென்ற வண்ணம் உள்ளது. இச்சாலையில் இதுவரயைில் மின்விளக்குகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் அதிகளவில் கும்மிருட்டு நிலவி வருகின்றது. வாகனங்கள் வளைவில் திரும்பும்போது எதர்பாராத விதமாக எதிரே வரும் வாகனங்களின் மீது மோதி அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றது. இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என மக்கள் பலமுறை அதிகாரிகளை வலியுறுத்தியும் இதுவரையில் நடவடிக்கை இல்லை. ஆகவே, வளைவு சாலையில் மின்விளக்குகள் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.