வீட்டின் மீது விழுந்த பந்தை எடுத்த போது மின்சாரம் பாய்ந்து விபத்து
போச்சம்பள்ளி அருகே பந்து விளையாடும்போது வீட்டின் மீது விழுந்த பந்தை எடுக்க சென்றபோது மின்சாரம் பாய்ந்து இருவர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரது மகன் கோவிந்தசாமி இவர் கோயில் சிற்பங்கள் செய்யும் பணியை செய்து வருகிறார் இவரது மகன் சந்தோஷ்குமார் என்பவர் அருகில் உள்ள ஐவிஎல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ் குமார் மற்றும் அவரது சித்தப்பா மகன் ஆகிய இருவரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர் அப்பொழுது பந்து வீட்டில் மேல் உள்ள கொட்டகை மீது விழுந்ததாக கூறப்படுகிறது அதனை எடுக்க சந்தோஷ் குமார் வீட்டின் மீது ஏறி அங்கிருந்த இரும்பு குழாய் ஐ பிடித்ததாக கூறப்படுகிறது.
அதில் மின் வயர் சேதமாகி அந்த இரும்பு குழாயை பின்னியவாறு இருந்த நிலையில் அதன் மீது மின்சாரம் பாய்ந்து சந்தோஷ் குமார் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தாக தெரிகிறது. இதையறியாத அவரது சித்தப்பா மகன் ஓடிச் சென்று அவரை பிடித்து இழுக்கும் போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி விசியுள்ளது. இதில் கீழே விழுந்துள்ள பின்னர் அவரது அத்தை சென்று பிடிக்கும் பொழுது அவரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தர்மபுரியில் உள்ள தனியார் இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாரூர் போலீசார் சந்தோஷ் குமார் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த மின் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின் விபத்தில் பலியான சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.