பனியின் போது மின் கசிவு - மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
Update: 2023-12-19 06:28 GMT
மின் விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் சமாதியன் குளத் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி 44 .இவர் எலக்ட்ரீசியன் லேபர் ஆக வேலை செய்து வருகிறார் . மேலும் இவர் வேளியநல்லூர் ராம்குமார் என்பவரிடம் கடந்த ஏழு ஆண்டுகளாக உதவியாளராக எலக்ட்ரீசியன் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் செய்யாறு டவுன் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒருவீட்டிற்கு சின்னசாமியை வேலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.அங்கு வேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தூக்கி வீசப்பட்டாராம். உடனடியாக அவரை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மருத்துவர் குழு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து செய்யாறு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் சோனியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.