அலட்சியத்தால் பறிபோன எலக்ட்ரீசியன் உயிர் - மருத்துவமனை முற்றுகை

Update: 2023-12-04 04:43 GMT

நடராஜ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் நடராஜ்(70), எலக்ட்ரீசியனான இவருக்கு நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, மனைவி காஞ்சனா, மகள் குணவதி ஆகியோர் அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு இருந்த செவிலியர், மற்றும் உதவியாளர் ஆகியோர் விபத்தில் அடிபட்ட நபர்களுக்கு சிகிச்சையளித்துக் அளித்து கொண்டு இருந்தனர்.

அவர்களிடம், தந்தை நெஞ்சுவலியால் துடிப்பதாக கூறி சம்பந்தப்பட்ட டாக்டரிடம் காண்பிக்க உதவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு, போய் உட்காரு, டாக்டரிடம் சொல்கிறேன் என செவிலியர் பதிலளித்துள்ளார். தொடர்ந்து எந்தவித சிகிச்சையும் அளிக்காததால் நடராஜ் துடித்தார். இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்று கையிட்டனர். மேலும், செவிலியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.சத்தம் கேட்டு அங்கு வந்த மருத்துவர் முத்துவேல், நடராஜை பரிசோதிக்க குளுக்கோஸ்போடச் சொல்லிவிட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தார்.

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சை தேடிய போது, டிரைவர் பணியில் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து, மாற்று வாகனத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, நடராஜ் உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உரிய நேரத்தில் சிகிச்சையளித்திருந்தால் நடராஜை காப்பாற்றியிருக்கலாம் எனக்கூறிடாக்டர் முத்துவேலிடம் சுமார் ஒரு மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நடராஜின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.சம்பவம் குறித்து சேலம் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதியிடம், குணவதி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு கெங்கவல்லி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமாருக்கு இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவர், செவிலியர், உதவியாளரிடம் விசாரணை நடத்தி. அதன் அறிக்கையை இணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் என மருத்துவர் செந்தில் குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News