மின்வாரிய துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து பலி
திருவண்ணாமலையில் மின்வாரிய துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-08 15:23 GMT
திருவண்ணாமலை வேங்கிக்கால் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மனைவி அமுதா (வயது 56). இவர் வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அமுதாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.